பிலிப்பைன்ஸ்க்கு ப்ரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி - இந்தியா பிலிப்பைன்ஸ் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் பிரதிபலிப்பு!

பிலிப்பைன்ஸ்க்கு பிரமோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒத்துழைப்பு கொடுத்துள்ளது.

Update: 2024-04-21 03:23 GMT

தென் சீன கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் சூழலில் இந்தியா- பிலிப்பைன்ஸ் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் விதமாக அந்நாட்டுக்கு முதல் தொகுப்பு பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தது. அந்நாட்டுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு ரூபாய் 3126 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஏவுகணை விநியோகத்தை இந்தியா தொடங்கியுள்ளது .

ஒப்பந்தத்தின்படி மேலும் 3 தொகுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டது. ஒப்பந்தத்தின்படி மேலும் மூன்று தொகுப்பு ஏவுகணைகள் மற்றும் அதை ஏவுவதற்கான உபகரணங்களை இந்தியா அந்நாட்டுக்கு விநியோகிக்க உள்ளது. இந்திய விமானப்படையின் C- 17 சரக்கு விமானம் மூலம் ஏவுகணை மற்றும் அதை ஏவுவதற்கான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முதல் பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி இதுவாகும்.

அர்ஜென்டினா உட்பட மேலும் சில நாடுகளும் இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணையை கொள்முதல் செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளன. பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனம் என்ற இந்திய ரஷ்ய கூட்டு நிறுவனம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் இந்த அதிவேக ஏவுகணை கப்பல், நீர்மூழ்கி கப்பல், போர் விமானம் மற்றும் நிலத்திலிருந்து எதிரியின் இலக்கைத் துல்லியமாக தாக்கி அடிக்கும் திறன் கொண்டது. ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பாயும் திறன் கொண்டது.


SOURCE :Dinamani

Similar News