#Breaking : 'டாஸ்மாக் கடைகளை மூடுக' : போராட்டம் அறிவித்த தமிழக பா.ஜ.க!

Update: 2021-06-12 14:49 GMT

கொரோனா தொற்று 2-வது அலை தமிழகத்தில் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.

இந்நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், கடந்த ஆண்டு நோய்த்தொற்றின்போது டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தி.மு.க போராடிவிட்டு இப்போது டாஸ்மாக் கடைகளை திறக்க முயல்வது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜக திமுக அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது. இது பாஜக தலைவர் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் மேலும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி நாளை காலை 10 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்", என்று அறிவித்துள்ளார். 

இதனை அடுத்து பிற எதிர்க்கட்சிகளும் இதே போல் ஆர்பாட்டம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News