மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்தி வையுங்கள்: மீண்டும் கோரிக்கையை முன்வைக்கும் WHO !

அனுமதிக்கப்படும் மூன்றாம் டோஸ் தடுப்பூசிகள். நிறுத்தி வைக்குமாறு மீண்டும் கோரிக்கையை முன்வைக்கும் உலக சுகாதார நிறுவனம்.

Update: 2021-08-24 14:01 GMT

குறிப்பாக உலகில் சில நாடுகளில் தடுப்பூசிகள் பற்றாக்குறை இன்னும் இருந்து தான் வருகிறது. எனவே அத்தகைய நாடுகளுக்கு தடுப்பூசி பற்றாக்குறையை ஏற்படுத்தி பிற நாடுகள் மட்டும் ஏன்? மூன்றாவது டோஸ் தடுப்பூசிகளை அனுமதிக்கின்றது என்ற கேள்வி தற்போது முன் வைக்கப்படுகின்றது. எனவே இப்போது உலக நாடுகள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளார். 


ஏற்கனவே உலக நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களைக் காப்பதற்காக மூன்றாவது டோஸ் செலுத்தும் பணியை ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் உலக சுகாதார மையத்தின் இத்தகைய வேண்டுகோளை நிராகரித்துவிட்டது. இந்நிலையில் டெட்ரோஸ் அதோனம் அவர்கள் மீண்டும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதைப்பற்றி அவர் கூறுகையில், "இரண்டு மாதங்களாவது தடுப்பூசி மூன்றாவது டோஸை நிறுத்திவைக்கவும் என்று கோரினார்.


தடுப்பூசியை பிற நாடுகளுக்கு தருவது தொடர்பாக உண்மையிலேயே நான் மிகுந்த விரக்தியில் உள்ளேன். உலகின் பல நாடுகள் முதல் டோஸ், இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வழியில்லாமல் தவிக்கும் சூழலில், சில நாடுகள் மூன்றாவது டோஸை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை உலகளவில் கொரோனா பாதிப்புகள் எதிர்க்க அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதுவரை இந்த உலகில் உள்ள அனைவரும் பாதுகாப்பான நபராக மாறும் வரை எந்த ஒரு தனிநபரும் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறமுடியாது" என்று கூறியிருக்கிறார்.

Input:https://www.livemint.com/news/world/vaccine-injustice-who-chief-calls-for-two-month-moratorium-on-booster-doses-11629720541480.html

Image courtesy:livemint 


 


Tags:    

Similar News