ஆப்கன்: தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்தது காபூல் விமான நிலையம் !

காபூல் விமான நிலையம் தற்போது தனது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில் ரோந்து பணியில் அவர்கள் துப்பாக்கி ஏந்தி, தற்போது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்கள்.

Update: 2021-09-01 13:56 GMT

கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ படை முழுமையாக மக்களை பாதுகாத்து வந்தது. ஆனால் தற்போது அங்கு நடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் வென்று உள்ளார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் முழுவதுமாக ஆப்கானை விட்டு வெளியேறியது. இந்நிலையில் தலிபான்கள் தங்களுடைய முழு கட்டுப்பாட்டின் கீழ் காபூல் விமான நிலையத்தை கொண்டு வந்துள்ளார்கள். 


இதற்கான அறிவிப்பை ஏற்கனவே அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்கள் அறிவித்திருந்தார். ஆனால், ஒருநாளைக்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் முற்றிலும் வெளியேறிவிட்டனர். இதனை அந்நாட்டு ராணுவ ஜெனரல் கென்னத் மெக்கென்ஸி தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளார். இருந்தாலும் அமெரிக்க ராணுவத்தில் சில விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும், அமெரிக்கபடைகளின் தலைவரும், அமெரிக்க தூதரும் கடைசி நபர்களாக விமானத்தில் ஏறியதாகவும், அமெரிக்க ராணுவங்கள் வெளியேறியதை தொடர்ந்து, காபூல் நகரில் தலிபான்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடினர். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விமான நிலையத்தை சுற்றிலும் இயந்திர பீரங்கிகள், துப்பாக்கிகளை ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இந்த மாதிரியான ரோந்து பணிகளை மேற்கொள்ளும் பொழுது அங்கு இருக்கும் மக்கள் மிகவும் பயத்துடன் இருக்கிறார்கள். 

Input:https://www.moneycontrol.com/news/photos/world/scenes-of-kabul-airport-taliban-in-full-control-post-us-withdrawal-7410921.html

Image courtesy:Moneycontrol


Tags:    

Similar News