அமெரிக்காவில் 4வது அலை: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவை, நிபுணர் குழுவின் அறிக்கை !

அமெரிக்காவில் தற்போது அதிகமாக பரவியுள்ள பாதிப்புக்கள் காரணமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் தேவை என நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.

Update: 2021-08-18 13:45 GMT

உலகமெங்கிலும் கொரோனாவின் முதல் அலை ஏற்பட்ட காலத்தில் பாதிப்புகள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருந்தது. ஆனால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பாதிப்புகள் எண்ணிக்கை குறைய தொடங்கியது. இருப்பினும் உருமாறிய வைரஸ்கள் காரணமாக பாதிப்புகள் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா நான்காம் அலை வேகமெடுத்துள்ளது. இதனால் அங்கு பாதிப்புகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


குறிப்பாக உருமாறிய டெல்டா வகை வைரஸ்கள் அதிகமாக பரவி வருவதால் ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு, தற்பொழுது பூஸ்டர் டோஸ் என்று அழைக்கப்படும் 3வது தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா நிபுணர்கள் கூறி வருகின்றனர். டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த மருத்துவர் நிபுணர் குழு பரிந்துரைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


அரசின் மருத்துவர் நிபுணர் குழுவும் இந்த வாரம் இது தொடர்பான பரிந்துரையை வெளியிட உள்ளது. முதலில், மருத்துவ பணியாளர்கள், வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு பின்னர் அனைத்து வயதினருக்கும் விரிவுபடுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் அனைத்து மக்களுக்கும் இது செலுத்தப்பட வேண்டும் என்று அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் தற்பொழுது அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Input:https://www.cnbc.com/2021/08/17/us-to-recommend-covid-vaccine-booster-shots.html

Image courtesy:CNBC news


Tags:    

Similar News