ஆப்கன்: புதிய ஆட்சியை நிறுவ உள்ள தலிபான்கள் பிற நாடுகளிடம் வைக்கும் கோரிக்கை !

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்ற உள்ள தலிபான்கள் தற்போது பிற நாடுகளிடம் தங்கள் ஆட்சியை ஆதரிக்குமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளது.

Update: 2021-08-30 13:23 GMT

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், தலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சராக ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் பொறுப்பேற்க இருப்பதாக தொடர்ச்சியான வண்ணம் செய்திகள் வெளியாகியுள்ளன. எங்களின் புதிய ஆட்சியை அனைத்து நாடுகளும் ஆதரிக்கும். யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று ஆப்கனில் அமையவுள்ள தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்க உள்ள ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பேட்டியின் போதும் கூறுகையில், "உலக நாடுகள் அனைத்துடனும் நாங்கள் நட்புறவு பாராட்டவே விரும்புகிறோம். 20 ஆண்டுகள் அமெரிக்கப் படைகள் இங்கு இருந்தன. இப்போது படைகளை விலக்கிக் கொண்டனர். அமெரிக்காவுடன் நட்புறவுடன் தான் இருந்தோம். மேலும் மீண்டும் அமெரிக்கா ஆப்கான் பொருளாதாரத்தில் நீடித்த உறவை மேற்கொள்ள வேண்டும். இந்தியா மட்டுமல்ல, தஜிகிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் என்று அனைத்து நாடுகளுடனும் நட்புறவே பேணுவோம். ஆப்கனை ரஷ்யர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன் எனது இளமை பருவத்தில் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றேன். எனவே இவர் இந்திய ராணுவ அகாடமியில் முன்னாள் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 


ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களும், சீக்கியர்களும் வெளியேற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இங்கு அமைதியாக வாழலாம். அவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கனிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற இந்துக்களும், சீக்கியர்களும் கூட மீண்டும் ஆப்கன் வந்து வாழலாம். எங்களின் புதிய ஆட்சியை அனைத்து நாடுகளும் ஆதரிக்கும். யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை" என்று அவர் கூறியுள்ளார். 

Input:https://www.firstpost.com/india/want-good-relations-with-all-neighbours-top-taliban-leader-sher-mohammad-abbas-stanikzai-tells-news18-9922561.html/amp

Image courtesy:first post


Tags:    

Similar News