ஆப்கன்: உலக நாடுகளுடன் சிறந்த நட்புறவைப் ஏற்படுத்த விரும்புகிறதா? தலிபான்களின் வெற்றி.!

ஆப்கானிஸ்தான் தற்பொழுது முழுவதுமாக தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்த விலகி உலக நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்திக் அவர்கள் விரும்புகிறார்கள்.

Update: 2021-08-31 13:56 GMT

ஆப்கானிஸ்தான் தற்போது முழுவதுமாக தலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 20 ஆண்டு காலமாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் நேற்றுடன் முழுமையாக அங்கிருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் தலிபான்கள் கொண்டு வந்தனர். இவ்வளவு நாள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் நிலைக்கு மக்கள் விமான நிலையத்திற்கு படையெடுக்க தொடங்கினார்கள். ஆனால் இனிமேல் தலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ள விமான நிலையத்திற்கு மக்கள் செல்வார்களா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. 


இந்நிலையில் விமான நிலையத்தில் நடந்து சென்ற தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் கூறுகையில், "ஆப்கானிஸ்தானுக்கு பாராட்டுகள். இது நாம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. தலிபான்களின் வெற்றி, படையெடுப்பாளர்களுக்கு கிடைத்த பாடம். தலிபான்களின் ஆட்சி, முந்தைய ஆட்சி போல் இருக்காது.


பாதுகாப்பு படையினர் பொறுமையாகவும் சிறப்பாகவும் செயல்படுவார்கள். அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுடன் சிறந்த நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம். அனைத்து நாடுகளுடன் சிறந்த தூதரக உறவை ஏற்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர் கூறினார். பிற நாடுகளுடன் அமைதியான சிறந்த நல்லுறவை ஏற்படுத்த தலிபான்கள் தற்பொழுது விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். இவர்களுடைய விருப்பம் நீண்ட நாள் வரைக்கும் நீடித்து நிலைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Input:https://www.indiatoday.in/world/story/afghanistan-news-live-updates-august-29-taliban-attacks-kabul-us-india-1846617-2021-08-29

Image courtesy:India Today





Tags:    

Similar News