ஆப்கன்: ட்ரோன் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, பின்னணி என்ன ?

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பதற்கு பின்னணி காரணம் எதுவாக இருக்கும்.

Update: 2021-08-28 13:39 GMT

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன. இதற்கிடையில், மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து IS பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது.


இந்த தாக்குதலில் இருந்து 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 175 பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தாக்குதல் நடத்தியவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள IS பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் மாகாணத்தில் உள்ள IS பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா ட்ரோன் விமானம் மூலம் அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தியது. 


இந்த வான்வெளி தாக்குதலில் இலக்கை வெற்றிகரமாக கொன்றுவிட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன் தெரிவித்துள்ளது. காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்படி, இந்த தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வரும் 31ம் தேதி முழுவதும் வெளியேற உள்ள நிலையில் இந்த தாக்குதல் முக்கியத்துவம் கருத்தப் படுகிறது. மேலும், காபூல் விமான நிலையத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

Input:https://www.hindustantimes.com/world-news/us-hits-back-at-isis-k-days-after-kabul-attack-kills-terrorist-planner-in-drone-strike-in-afghanistan

Image courtesy:Hindustantimes news


Tags:    

Similar News