ஆஸ்திரேலியா: டெல்டா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட கடும் கட்டுப்பாடுகள் !

உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-08-30 13:25 GMT

உலகமெங்கும் உள்ள நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் ஆஸ்திரேலியா சிக்கியுள்ளது. டெல்டா வகை கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு திணறி வருகிறது. ஏற்கனவே அங்கு பாதிப்புகள் குறைந்து நிலையில் விதிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தான் தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான, 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்னில் ஏற்கனவே தொடர்ந்து 4 வாரங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. 


அங்கு டெல்டா கோவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 92 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள குருஉருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸ் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், அங்கு டெல்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட அனைத்து நபர்கள் அடையாளம் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 


மேலும் இதுகுறித்து விக்டோரியா மாகாணத்தின் பிரதமர் டான் ஆண்ட்ரூஸ் கூறுகையில், "ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரே நாளில் 1,305 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்தது. ஊரடங்கை திரும்பப் பெற முடியாத அளவுக்கு மெல்போர்ன் நகரில் தொடர்ந்து டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் நிச்சயமாக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் அவர்கள் மேற்கொள்ளும் கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்" அவர் கூறினார். 

Input:https://www.abc.net.au/news/2021-08-28/images-transformed-australias-covid-human-political-story/100413526

Image courtesy:ABC news




Tags:    

Similar News