காஷ்மீரில் 60 இளைஞர்கள் காணவில்லை- மறுப்பு தெரிவிக்கும் காவல்துறை!
Top Stories
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி காஷ்மீரில் இருந்து 60 இளைஞர்கள் காணாமல் போனதாக வெளியான செய்தியை காஷ்மீர் காவல்துறையினர் மறுத்தனர்.
இது தொடர்பாக காஷ்மீர் காவல் துறையினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். அதில் காஷ்மீரில் இருந்து 60 இளைஞர்கள் காணாமல் போய் இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60 இளைஞர்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் செய்தி பல்வேறு ஊடகங்களில் வெளியானது. "ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆக்கிரமிப்பு, ஜம்மு காஷ்மீரில் ஒரு கவலைக்குரிய போக்கு" என்ற தலைப்பிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த இரண்டு மாதங்களில் 60 இளைஞர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாகவும் அவர்கள் வேலைக்காக வெளியூர் செல்கிறோம் என்று கூறி பயங்கரவாத குழுக்களில் இணைந்து உள்ளனர் என்றும் அவர்கள் கூடிய விரைவில் நம்மிடம் நல்ல முறையில் திரும்பவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் NDTV செய்தி நிறுவனத்துக்கு காவல்துறை உயர் அதிகாரி விஜயகுமார் பேட்டி அளித்ததாக மேற்கோள்காட்டி செய்தி ஒன்று வெளியானது.
காஷ்மீர் ஐஜியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள விஜயகுமாரை NDTV மேற்கோள் காட்டியது போலியான தகவல் என்று கூறிய காவல்துறையினர் இந்த தகவல் உண்மையானது அல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Source : Opindia