கேரளா: உச்சக் கட்டத்தில் கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை !

கேரளா மாநிலத்தில் உச்சக் கட்டத்தில் அதிகரித்து செல்லும் கொரோனா இன்று மீண்டும் பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

Update: 2021-09-02 13:42 GMT
கேரளா: உச்சக் கட்டத்தில் கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை !

அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது தொடர்ச்சியாக கொரோனா அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவைப் பொருத்த வரையில் மற்ற மாநிலங்களில் பாதிப்புகள் எண்ணிக்கையைவிட கேரளாவில் அதிகரித்து வரும் பாதிப்புகள் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. இதற்காக மத்திய அரசு தன்னுடைய மருத்துவ குழுவை கேரளாவிற்கு அனுப்பி வைத்து இருந்தது. இருந்தாலும் ஊரடங்கு போது ஏற்பட்ட தளர்வுகள் காரணமாக அங்கு தற்போது பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. 


அதன் தொடர்ச்சியாக பாதிப்புக்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருந்தது. இந்நிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் 32,803 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 21,640 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 173பேர் இன்று உயிரிழந்துள்ளனர். எனவே இப்படி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பாதிப்புக்கள் காரணமாக மற்ற மாநிலங்கள் தங்களுடைய எல்லை பகுதியை தீவிர கண்காணிப்பில் கவனித்து வருகிறார்கள். 


குறிப்பாக கேரளா கூட எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இத்தகைய கண்காணிப்பு தீவிரம் ஆக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனால் கேரளாவை மொத்தமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 38 ஆயிரத்து 614 ஆக அதிகரித்துள்ளது.இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை20,961 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 912 பேர் உள்ளனர். கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.   

Input:https://www.livemint.com/news/india/kerala-sees-30-000-plus-covid-cases-for-second-straight-day-active-tally-over-2-2-lakh-11630499592795.html

Image courtesy:livemint


Tags:    

Similar News