மூன்று நாளில் உயிர்த்தெழுந்து வருவேன்- மூடநம்பிக்கையில் உயிரைவிட்ட பாதிரியார்!

Missionary Died due to his Superstitious Belief.;

Update: 2021-08-29 13:23 GMT
மூன்று நாளில் உயிர்த்தெழுந்து வருவேன்- மூடநம்பிக்கையில் உயிரைவிட்ட பாதிரியார்!

தான் இயேசுவின் தூதர் என்றும் தன்னை புதைத்தால் மூன்று நாட்களுக்குள் உயிர்த்தெழுவேன் என்று கூறியதால் மண்ணிற்குள் புதைக்கப்பட்ட பாதிரியார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆப்பிரிக்காவின் நடந்துள்ளது.

ஆப்ரிக்கா ஜாம்பியாவில் பாதிரியார் ஒருவர் மண்ணில் புதைக்கப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்து வருவதாக கூறி மண்ணில் புதைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இரு பாதிரியார்கள் உதவி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் தான் மண்ணில் புதைக்கப்பட்ட மூன்று நாட்களில் உயிர்த்தெழுந்து வருவேன் என்று கூறிய அந்த பாதிரியார் இந்த இருவரை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் பாதிரியார் மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களுக்கு தெரிந்தவுடன் அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் பாதிரியாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிரியாருக்கு உதவி செய்த இரண்டு ஊழியர்கள் தலைமறைவானதை தொடர்ந்து அந்த இரண்டு ஊழியர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இயேசு மூன்று நாளில் உயிர்த்தெழுந்து வந்ததார் என்ற கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் பாதிரியார் ஒருவரும் அதே பாணியில் உயிர்த்தெழுந்து வருவதாக கூறி மண்ணில் புதைந்து உயிரைவிட்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source : one India

Tags:    

Similar News