மீண்டும் பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா: எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள் !
தற்பொழுது பிரேசிலில் நோய்தொற்று ஒரே நாளில் நாளில் 41,714 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இதை எச்சரிக்கை செய்கிறார் மருத்துவ நிபுணர்கள்.
உலக நாடுகள் பலவும் தற்போது கொரோனாக்கு எதிராக, தடுப்பூசி மக்களுக்கு செலுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இருந்தாலும் தடுப்பூசி ஒன்று மட்டும் இத்தகைய கொரோனாவிற்கு தீர்வாக முடியாது. கூடவே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். உதாரணத்திற்கு சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது. உலக சுகாதார நிறுவனமும் இதைதான் உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக மக்களுக்கு பொது இடங்களில் சமூக இடைவெளியை கிடைப்பது, முக கவசம் அணிவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தடுப்பூசி போட்ட பிறகு மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 41,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. பிரேசில் நாட்டில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டு செய்தி குறிப்பின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 41,714 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்வடைந்து உள்ளது.
குறிப்பாக மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் ஏனெனில் இது அதிகமாக வரக்கூடும் என்று அங்கு உள்ள மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர். இதை மக்கள் இப்படியே அதிகரிக்க தொடங்கினால், முன்பு ஏற்பட்டதை விட அதிகமான பாதிப்புகளை நாம் எதிர் கொள்ள வேண்டும். எனவே அவற்றைத் தடுப்பதற்கு மற்றும் உருமாறிய கொரோனாக்கு எதிராக செயல்படுவதற்கும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
Image courtesy:wikipedia