நாட்டு நடப்பு தெரியாமல் பேசும் அமைச்சர் பொன்முடி-நெட்டிசன்கள் கலாய் !
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாணவர்களும் அரியர் பாடத்தில் தேர்ச்சி என்று கூறி மாணவர்கள் மத்தியில் பிரபலமானார்.
பொறியியல் கல்லூரிகளில் ஒரு ஆண்டில் அரியர் வைத்த மாணவர்கள் அடுத்த ஆண்டிற்கு செல்ல ஸ்டாலின் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பொன்முடி பேசியுள்ளது அனைவருக்கும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சி அடையாவிட்டால் அதனை அரியர் என்று அடுத்த ஆண்டிற்கு சென்று எழுதும் வழக்கம் இருந்து வருகிறது. முன்னர் ஒருமுறை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் அடுத்த ஆண்டிற்கு செல்ல முடியாது என்று அறிவித்து இருந்தது. ஆனால் அதனை கல்வியாளர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த முறை நடைமுறையில் வராமலேயே கைவிடப்பட்டது.
இதனை தெரிந்து கொள்ளாத உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் அரியர் வைத்த மாணவர்கள் அடுத்த ஆண்டிற்கு செல்லலாம் என்று தெரிவித்து கல்வியில் தாங்கள் செய்த புரட்சியின் காரணமாக அரியர் வைத்த மாணவர்கள் அடுத்த ஆண்டிற்கு செல்லலாம் என்று உத்தரவிட்டதைப் போல் பேசியுள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மாணவர்களும் அரியர் பாடத்தில் தேர்ச்சி என்று கூறி மாணவர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனால் முதலமைச்சர் ஸ்டாலினும் மாணவர் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக இதுபோன்று செய்யாத ஒன்றை செய்ததாக சட்டசபையில் அமைச்சர் பொன்முடி பேச முயன்று காமெடி பீசாகி விட்டாரே என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தற்போது என்ன நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டசபையில் பேசியுள்ளது அனைவரிடையிலும் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source : Facebook