ஆப்கான் தலிபான்கள் ஆட்சி பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்- இலங்கை முன்னாள் பிரதமர் வலியுறுத்தல் !
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி இலங்கை அரசு கட்டாயம் எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் பிரதமர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சியை இலங்கை அரசு அங்கீகரித்தால், அது தீவிரவாத அமைப்பிற்கு உதவுவதற்கு சமம். எனவே அங்கீகரிக்கக் கூடாது என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வலியுறுத்தியுள்ளார். ஆப்கனில் அமெரிக்கப் படைகள் வெளிேயறத் தொடங்கியபின் தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காபூல் நகரில் நுழைந்தவுடன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டார். இதனால் ஆப்கனில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி நிறுவப்பட உள்ளது. ஆப்கனின் அரசியல் ரீதியாக தீர்மானங்களை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றன.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அவர்கள் இதுபற்றி கூறுகையில், "இப்போது மீண்டும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் சர்வதேச பயங்கரவாதிகளின் மையமாக செயல்பட வாய்ப்பு உள்ளது. இலங்கையிலும் அதன் தாக்கம் ஏற்படலாம். பயங்கரவாதிகளுக்கு இலங்கை ஒரு போதும் ஆதரவாக இருக்கக்கூடாது. அந்த வகையில் தலிபான்களுக்கு எதிரான நிலையை இலங்கை அரசு எடுக்க வேண்டும்.
முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தை வாபஸ் பெற வேண்டும். மேலும் தலிபான்களின் பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளை உலகம் பார்த்துள்ளது. எனவே ஒவ்வொரு போதும் அவர்களை ஆட்சி நடந்து விட்டது இலங்கை அரசு அனுமதிக்க வேண்டாம். அவர்கள் தங்களுடைய மதத்தை தவிர மதத்தை கடக்கும் துச்சமாக எண்ணக் கூடியவர்கள். அவர்கள் தலைமையில் ஆட்சி அமைப்பது உலகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்" இன்று அவர் கூறியுள்ளார்.
Image courtesy:NDTV news