ஆப்கன்: படித்தவர்கள், மருத்துவர்கள் என இவர்களுக்கு கருணை காட்டும் தலிபான்கள் !
தற்பொழுது ஆப்கானிஸ்தானிலிருந்து படித்தவர்களும், மருத்துவர்களும் வெளியே செல்ல நாங்கள் விரும்பவில்லை என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
தற்பொழுது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையத்தில் நாள் கணக்கில் காத்துகிடக்கின்றனர். நாட்டை விட்டு எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெிரசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் தலிபான்கள் தற்பொழுது சுற்றி வளைத்துக் விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காபூல் விமான நிலையம் செல்லும் சாலை அடைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை ஆப்கானியர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால், வெளிநாட்டினர் இந்த சாலையில் விமான நிலையத்திற்கு செல்லலாம். காபூல் விமான நிலையத்தில் உள்ளவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும்.
அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாது. ஆப்கானிய மக்கள் இங்கிருந்து வெளியேற நினைப்பதாக முட்டாள்தனம். ஏற்கனவே அறிவித்தபடி ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் தனது மீட்பு பணியை அமெரிக்கா முடிக்க வேண்டும். அதற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்படாது. அதற்குமேல் ஆப்கானியர்கள் மீட்டு செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. குறிப்பாக டாக்டர்களும், படித்தவர்களும் ஆப்கனை விட்டு செல்லாமல், இங்கேயே பணிபுரிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Image courtesy:Times of India