தலிபான்களுடன், ஆப்கான் பெண்கள் கட்டாயத் திருமணம்? HRC எச்சரிக்கை !

தலிபான்கள், ஆப்கனிஸ்தான் பெண்களை கட்டாயத் திருமணம் செய்ய இருப்பது மனித உரிமை ஆர்வலர்களால் எச்சரிக்கப்படுகிறது.

Update: 2021-08-17 13:03 GMT

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் கட்டாய திருமணம் செய்து பெண்களை அடிமையாக்கும் முயற்சி துவங்கி உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர். தற்பொழுது, ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மத கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் தலிபான்கள், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்துவதும் துவங்கி உள்ளது.


மேலும் இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 1996-2001ல் தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் இருந்தபோது பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டன. மேலும், 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. வேலை மறுக்கப்பட்டது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மீண்டும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஜூலையில் பதாக் ஷான், தக்கார் மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது, உள்ளூர் மதத் தலைவர்களிடம் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 45 வயதுக்குட்பட்ட விதவையர் குறித்த பட்டியல் கேட்டு உள்ளனர்.


தங்கள் அமைப்பில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதற்காக இந்தப் பட்டியலை தலிபான் கேட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதன் வாயிலாக கட்டாய திருமணம் செய்து, மனைவி என்ற பெயரில் பெண்களை அடிமையாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளனர். இது போன்ற செயல்கள் பெண்கள் சுதந்திரத்தை பறிப்பதுடன், மனித உரிமை மீறலாகவும் உள்ளது என்று அவர் தற்பொழுது குற்றம் சாட்டியுள்ளார். 

Input:https://www.news18.com/news/explainers/explained-taliban-may-project-moderate-face-but-heres-why-their-return-is-making-afghan-women-nervous-4092749.html

Image courtesy: News18 


Tags:    

Similar News