தி.மு.க ஆட்சியில் வாழ்வாதாரம் கேள்விக்குறி: கேபிள் ஆபரேட்டர்கள் போராட்டம்!
தி.மு க ஆட்சியில் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிட்டதா? கேபிள் ஆபரேட்டர்கள் போராட்டம் நடத்தி தற்போது கைது நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளார்கள்.
தமிழகம் முழுவதும் பல லட்சம் இணைப்புகள் கொண்ட அரசு கேபிள் டி.வி மூலமாக பொதுமக்களுக்கு பொழுது சேவை வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி மூலமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தி.மு.க அரசு நடவடிக்கை காரணமாக தங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என்று சாலையில் போராட்டம் நடத்துகிறார்கள். கடந்த 19ஆம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரசு கேபிள் டிவி சேனல் தமிழகம் முழுவதும் முடங்கியது.
இதனால் அரசு கேபிள் டிவி மூலம் பயனடைந்து வந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். இதனோட பொதுமக்கள் தனியார் கேபிள் இணைப்புகளுக்கு மாறி வருகின்றனர். இது குறித்து அரசு கேபிள் டிவி நிர்வாகத்திடம் முறையிட்ட பொழுது இதுவரை தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படவில்லை. விரைவில் கோளாறு சரி செய்யப்படும் என்று கூறுகின்றார்கள். ஆனால் இதுவரை சரி செய்யப் படவில்லை பல்வேறு மக்கள் அரசு கேபிள் டிவியில் இருந்து தனியாருக்கு மாறி விட்டார்கள்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் தெரிவித்தார்கள். மேலும் தங்களுடைய வாழ்வா தரும் பாதிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள். இதனால் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கேபிள் டிவி ஆபரேட்டர் இடம் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட இணைப்புகள் தனியார் வசம் சென்று விட்டது. எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கேபிள் டிவி ஆபரேட்டர் புலம்புகிறார்கள்.
Input & Image courtesy:Thanthi