ஆயுஷ்மான் பாரத் திட்ட முறைகேட்டில் சிஏஜி சுட்டிக்காட்டியது மாநில அரசை தான் மத்திய அரசை அல்ல - பா.ஜ.க கண்டனம்!

ஆயுஷ்மான் பாரத் திட்ட முறைகேட்டில் சிஏஜி சுட்டிக்காட்டியது மாநில அரசை தான் மத்திய அரசை அல்ல என்றும் மத்திய அரசை குறை கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும் பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-09-25 12:15 GMT

பா.ஜ.க மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஆயுஷ்மான் பாரத் திட்டம் எனப்படும் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்திலும் முறைகேடுகள் அடங்கியுள்ளன என சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குறிப்பிடப்பட்டுள்ளது உண்மைதான் ஆனால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் முறைகேடுகள் அனைத்து மாநில அரசுகளை நோக்கித்தான் என்பதை மு.க ஸ்டாலின் சொல்ல மறந்து விட்டார்.

தமிழகத்தில் ஒரே ஆதார் எண்கள், தவறான ஆதார் எண்களை குறிப்பிட்டு காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.இந்த வகையில் மட்டும் 4,761 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடந்துள்ளதாக சிஏஜி சுட்டிக்காட்டி உள்ளது. இனிமேலாவது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மத்திய பாஜக அரசு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறுவதை மு.க ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும்.இந்த திட்டத்தில் முறைகளை நடைபெறுவதை தடுக்க விதிமுறைகளை முறையாக பின்பற்ற அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறைக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

SOURCE :DAILY THANTHI

Similar News