கனடாவில் பாதுகாப்பு அமைச்சரானார் இந்திய வம்சாவளி பெண்!
கனடாவில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாடாளுமன்றத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும்கட்சியான லிபரல் கட்சி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், புதிய அமைச்சரவை அமைக்கின்ற பணியில் ஜஸ்டின் ட்ரூடோ தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த புதிய அமைச்சரவையின் பாதுகாப்பு துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் 54, நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். தாயார் பஞ்சாப்பை சேர்ந்தவர் ஆவார்.
அனிதா ஆனந்த் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட 14,511 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். மேலும் பல்வேறு பொது சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அது மட்டுமின்றி கனடா நாட்டின் 2வது பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெயரை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar