டிஜிட்டல் இந்தியாதான் புதிய இந்தியா: கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரதமர் மோடியை புகழ்ந்த நடிகர் மாதவன்!
பிரதமர் தன்னுடைய பதவிக்காலத்தை தொடங்கியபோது விவசாயிகளுக்கு ஸ்மார்ட் போன் கூட பயன்படுத்த தெரியாத ஒரு நாட்டில் தற்போது டிஜிட்டல் மயமாக்கலில் முதலிடத்தில் இருப்பதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரதமர் மோடியை நடிகர் மாதவன் புகழ்ந்துள்ளார்.
நடிகர் மாதவன் நடிப்பில் ராக்கெட்டரி என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது நடிகர் மாதவன் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்தியா சார்பில் நடிகர் மாதவன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடியின் 'மைக்ரோ எகானாமி' திட்டம் குறித்து பாராட்டி பேசினார். அப்போது விவசாயிகளுக்கு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தவோ அல்லது வங்கி கணக்கை சரியாக கையாளத் தெரியாத ஒரு நாட்டில் டிஜிட்டல் மயத்தை உருவாக்கினார்.
#JUSTIN | கேன்ஸ் திரைப்பட விழாவில் மோடியை புகழ்ந்த நடிகர் மாதவன்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) May 20, 2022
இன்றைய லைவ் அப்டேட்ஸ்>https://t.co/PecHV2HdY5#PMModi | #RMadhavan | #microeconomy | #digitalcurrency | #NewIndia | @ActorMadhavan pic.twitter.com/5TOS7pbyfV
இந்த திட்டம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். எனவே இத்திட்டம் சாத்தியம் இல்லை என்ற கண்ணோட்டத்துடன் உலகம் பார்த்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே மாற்றம் வந்தது. தற்போது உலகளவில மைக்ரோ பொருளாதாரத்தைப் பயன்படுத்துவதில் இந்தியாவும் இணைந்துள்ளது. ஒரு விவசாயி தனது வங்கியில் பணம் இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு கல்வி அறிவு தேவையில்லை எனவும் மொபைல் இருந்தாலே போதும் என்கின்ற நிலை வந்துள்ளது. அதுதான் புதிய இந்தியா. இவ்வாறு நடிகர் மாதவன் கூறினார்.
Source: Puthiyathalaimurai
Image Courtesy: Film Beat