ஆடி மாத சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்த சஷ்டி கவசம் ஓதிய கேப்டன் விஜயகாந்த்..! தமிழ் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் தமிழ் கடவுள்...!!

ஆடி மாத சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்த சஷ்டி கவசம் ஓதினார் கேப்டன் விஜயகாந்த். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு என்று ட்வீட் செய்துள்ளார்.

Update: 2020-07-26 14:01 GMT

கந்த சஷ்டி கவசத்தையும் தமிழ் கடவுளான முருகப்பெருமானையம் இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக தமிழ் ஹிந்துக்கள் ஒன்றிணைந்து வருகின்றனர். கறுப்பர் கூட்டத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில் வாசன் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியில் பணியாற்றியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான செந்தில் வாசனுக்கு ஜாமீன் மனுத் தாக்கல் செய்து அவரது தரப்பு வழக்கறிஞராக ஆஜரானவர் தி.மு.க வழக்கறிஞர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

ராஜ் திலக் என்ற இந்த வழக்கறிஞர் தி.மு.க ஆட்சிக் காலத்தில் அரசு வழக்கறிஞராக இருந்த ராஜ் இளங்கோவின் மகன். மேலும் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் NR இளங்கோவிடம் இவர் ஜூனியராகவும் பயிற்சி பெறுகிறார். தி.மு.க-விற்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் தொடர்பு இல்லை என்று ஆர்.எஸ்.பாரதி கூறியதில் உண்மை தன்மை இல்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது, ஆனால் ரம்ஜான் மற்றும் கிருஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளில் கலந்து கொள்வது துவங்கி, பகவான் ஸ்ரீ ராமரை இழிவுபடுத்துவது, ஹிந்து திருமண முறைகள் குறித்து உண்மை தன்மையற்ற அவதூறு பரப்புவது உள்ளிட்ட பல விஷயங்களை தி.மு.க செய்து வருகிறது.

ஆனால் இம்முறை தி.மு.க கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக தமிழ் ஹிந்துக்கள் ஒன்றிணைந்து வருகின்றனர். முன்னதாக, கறுப்பர் கூட்டத்தினரை கைது செய்ததற்கு தமிழக அரசிற்கும் காவல்துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்வீட் செய்தார். அதன் பிறகு, #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. 

இன்று ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் ஓதி விடியோவை வெளியிட்டுள்ளார் தே.மு.தி.க கட்சியின் தலைவர் கேப்டன் விஜயகாந்த். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், "வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்." என்று பதிவிட்டுள்ளார். 

இதனை அடுத்து, விஜயகாந்த் ரசிகர்கள் #தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா என்ற ஹேஷ்டேகில் பதிவிட்டு, ஹிந்து விரோத தி.மு.க - கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

Similar News