மதம் மாறியவர் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறலாமா? நீதிமன்றத்தின் கருத்து என்ன?
மதம் மாறியவர்கள் ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடை பெற முடியுமா என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்து இருக்கிறது.;
சென்னை உயர்நீதிமன்றத்தில் மதம் மாறியவர்கள் தங்களுடைய ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கிடை பெற முடியுமா? என்று வழக்கில் முக்கிய தீர்ப்பு தற்போது கிடைத்து இருக்கிறது. மேலும் இது தொடர்பான முக்கிய தகவல்களும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை சார்பில் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு சதவீதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடை ஒவ்வொரு பிரிவினருக்கும் வழங்கி வருகிறார்கள்.
மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. இது தொடர்பான வக்கீல் மற்றும் மத்திய அரசுக்கும் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு வழங்கப் படுவதில்லை. இங்கு சமூகரீதியாக பின்தங்கி சமூகத்தினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இதற்கிடையே மதம் மாறிய நபர் இட ஒதுக்கீடை பெறுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர் தனக்கு பிற்பட்ட வகுப்பில் இட ஒதுக்கீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது அந்த கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம். வேறு மதத்திற்கு மாறிய ஒருவர் தனது பழைய ஜாதியை சுமக்க முடியாது என்று தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கூறிய கருத்துக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கோள் காட்டி இருக்கிறது. அதாவது ஒருவர் இந்து மதத்தில் இருந்து வேறு ஒரு மதத்திற்கு மாறினால் அவர்கள் சாதியை சுமக்க முடியாது. அதே நேரம் அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு வந்தால் மீண்டும் அதே சாதியில் வந்து விடுவார்கள் என்று கூறியது.
Input & Image courtesy: Oneindia News