அனாபிலாக்டிக் அதிர்ச்சி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் ?
Causes and prevention for Anaphylactic shock.
அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்பது மனித உடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு கோளாறு ஆகும். இது உடலில் உண்டாகும் ஒவ்வாமை எதிர்வினையின் காரணமாக ஏற்படுகின்றது. மேலும் இதனால் மனித உயிருக்கு ஆபத்து விளைகிறது. உங்களுக்கு ஏதேனும் உணவு பொருட்களில் ஒவ்வாமை இருந்தால், அந்த பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, தேள் கொட்டுதல், பாம்பு கடித்தல், தேனீ கொட்டுதல் போன்ற சில விலங்கு தாக்குதல்களினாலும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை வெகுவிரைவில் மோசமடையகின்றது. இதன் விளைவுகள், தாக்குதல் உண்டான சில நிமிடங்களில் தொடங்குகிறது. மேலும், இது உடனடியாக பாதிக்கபட்டவரின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதன் விளைவாக அந்த நபருக்கு அனபிலாக்டிக் அதிர்ச்சி ஏற்படுகின்றது.
இது தவிர, பாதிக்கப்பட்ட நபரின் பிபி (Blood pressure) குறைவதினால் அவர் சுவாசிக்க சிரமப்படுகிறார். ஒரு நபரின் BB எதிர்பாராமல் திடீரென குறையும் போது தலைச்சுற்றல், வாந்தி போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன. இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒவ்வாமை ஏற்படும் போது உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற வேண்டும். அனாபிலாக்ஸிஸ் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஒரு நபர் எந்தெந்த பொருட்களினால் ஒவ்வாமைக்கு உள்ளாகின்றார் என்பதைப் பொறுத்தே பெரும்பாலும் இது ஏற்படுகின்றது. ஒவ்வாமையை ஏற்படுத்தும் மருந்துகள், பென்சிலின், வேர்க்கடலை, எறும்பு கடித்தல், தேனீ கொட்டுதல் மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள் போன்றவை அனாபிலாக்டிக் அதிர்ச்சியைத் தூண்டும் பொருட்களாகும். சில மயக்க மருந்துகளினாலும், தீவிரமாக உடற்பயிற்சி செய்வதினாலும் லேசான அனாபிலாக்டிக் எதிர்வினை உண்டாகிறது. எந்த ஒவ்வாமையின் காரணமாக இது உண்டாகிறது என்பதை கண்டறிய இயலாத நிலையில், நோயாளிகள் இது குறித்து ஒரு மருத்துவரிடம் கண்டிப்பாக ஆலோசிக்க வேண்டும்.
அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கான சிகிச்சை என்ன? பூச்சி கடித்ததினால் அனாபிலாக்ஸிஸின் சிக்கல் அதிகரித்தால், எதிர்காலத்தில் இத்தகைய ஆபத்தைத் தவிர்க்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அனாபிலாக்ஸிஸிற்கான சிகிச்சையைப் பெற முடியதா சிலர், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, ஒவ்வாமையை ஊக்குவிக்கும் பொருட்களிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
Input & Image courtesy:Logintohealth