பெரியம்மை போல் டெல்டா வகை வைரஸ் வேகமாக பரவும்: CDC ஆய்வில் தகவல் !

CDC report say's chickenpox same as to Delta virus

Update: 2021-07-31 13:29 GMT

இந்தியாவில் முன்பு ஒரு காலத்தில் பெரியம்மை நோய் மிகவும் தீவிரமாக பரவியது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அப்போதும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக பரவி பல பேருடைய உயிரைப் பறித்தது. அந்த வகையில் தற்பொழுது அதைப்போலத் தான் எளிதாக பரவிவரும் டெல்டா வகை வைரஸ்களின் தன்மைகள் பெரியம்மை, சின்னம்மை போன்ற நோய்களுடன் ஒத்துப் போகின்றது என்று அமெரிக்காவில் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களில்(CDC) அறிக்கை கூறியுள்ளது.


மேலும் இது குறித்த CDC செய்தியை கூறுகையில், டெல்டா வகை வைரஸ் தாக்குதல் ஜலதோஷம், பருவ காய்ச்சல், சிற்றம்மை, பெரியம்மை போல வேகமாக பரவுகிற வைரஸ். இது பெரியம்மை போல அதிவேகமாக தொற்றும். மேலும் இந்த வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். டெல்டா வகை வைரஸ் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் போட்டுக் கொள்ளாதவர்கள் இரண்டுபேரும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் 90 சதவீத பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். ஆனால் போட்டுக்கொள்ளாத நபர்களிடம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக CDC-யின் இயக்குநர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை கூறுகையில், "சின்னம்மை, பெரியம்மை போல டெல்டா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் போது, அவர்கள் மூலம் பிறருக்கு எளிதாக டெல்டா வைரஸ் பரவும்" என்று அவர் எச்சரித்துள்ளார். 

Input: https://m.timesofindia.com/world/us/delta-variant-as-contagious-as-chickenpox-cdc-study/articleshow/84896890.cms

 Image courtesy: Unsplash.com


Tags:    

Similar News