மடிக்கணினி இறக்குமதி செய்ய 110 விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
மடிக்கணினி இறக்குமதி செய்ய 110 விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது ஆப்பிள் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.
மடிகணினி, கணினி, கையடக்க கணினி மைக்ரோ கணினி, டேட்டா ப்ராசசிங் எந்திரங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இறக்குமதிக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் உரிமம் பெற வேண்டும் என்று மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. அதற்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை அடுத்து மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்தியது. இறக்குமதியை கண்காணிக்க மட்டுமே செய்வோம் என்று கூறியது.
இந்நிலையில் மடிக்கணினி, கணினி உள்ளிட்ட சாதனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரி 111 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அவற்றின் 110 விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டது. ஆப்பிள், டெல், லெனோவா, எச்.பி இந்தியா சேல்ஸ், ஐ.பி.எம் இந்தியா, சாம்சங் ,ஷாவ்மி டெக்னாலஜி, சிஸ்கோ, மைக்ரோசாப்ட், சீமென்ஸ் ,ஆரக்கல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மடிக்கணினி இறக்குமதிக்கு அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்த அனுமதி செல்லும்.
SOURCE :DAILY THANTHI