22 ஆன்லைன் சூதாட்ட செயலைகளுக்கு மத்திய அரசு தடை!

'மகாதேவ்' செயலி உட்பட 22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Update: 2023-11-06 07:30 GMT

ஆன்லைன் சூதாட்ட செயலி நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக 'மகாதேவ்' என்ற சூதாட்ட செயலி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக சதீஷ்காரில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியிருக்கிறது. இந்த மோசடிகளை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய மத்திய அரசுக்கு அமலாக்கத்துறை வேண்டுகோள் விடுத்தது .


'மகாதேவ்' செயலி உட்பட 22 ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை வெளியிட்டு இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்தி குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது. சதீஷ்காரில் மகாதேவ் சூதாட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ரூபாய் 5.39 கோடி சமீபத்தில் அமலாக்க துறையிடம் சிக்கியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பணம் முதல் மந்திரி பூபேஷ் யாதவிற்கு தேர்தல் செலவுக்கு வழங்க இருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


SOURCE :DAILY THANTHI

Similar News