கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியால் தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் - தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த அறிவுரை!

கொரோனா பரவல்அதிகரித்து இருப்பதால் தமிழ்நாடு உட்பட ஆறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Update: 2023-03-17 07:45 GMT

சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நூறுக்குள் இருந்தது படிப்படியாக அதிகரித்து நேற்று 754 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம். இந்த நிலையில் தமிழ்நாடு, மராட்டியம் , குஜராத்,: தெலுங்கானா கேரளா , கர்நாடகா ஆகிய ஆறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் நேற்று ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த சில வாரங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் மார்ச் 15ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 3,264 ஆவது அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது அங்கு உள்ளூர் மட்டத்தில் தொற்று பரவி இருப்பதை உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் மார்ச் எட்டாம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் மார்ச் 15ம் தேதி விட்டேன் முடிவடைந்த வாரத்தில் பாதிப்பு எருடன் 58 ஆக உயர்ந்துள்ளது.

பாதிப்பு விகிதம் 1.99 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது தேசிய பாதிப்பு விகிதத்தை விட அதிகம் இதுபோல் மற்ற ஐந்து மாநிலங்களிலும் பாதிப்பு விகிதம் அதிகரித்து உள்ளது. ஆகவே இந்த மாநிலங்கள் கொரோனா பரவலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . கொரோனாவுக்கு எதிரான போரில் இதுவரை கிடைத்த பலன்களை இழந்து விடக்கூடாது. திறமையை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வரவேண்டும். உள்ளூர் அளவில் கண்காணிப்பு தீவிர படுத்த வேண்டும் .

பரிசோதனை தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். புதிதாக மொத்தமாக நோய் பரவுப் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் . சுவாச தொற்று போன்றவற்றையும் கண்காணித்து பிரத்தியேக காய்ச்சல் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். நெரிசலான இடங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





 


Similar News