பென்ஷன் வாங்குபவர்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு!
பென்ஷன் வாங்குபவர்கள் கட்டாயம் மே 25 க்குள் இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு.
மத்திய அரசு பாதுகாப்பு துறையின் கீழ் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டவர்கள் தற்போது மே 25ஆம் தேதிக்குள் இறுதி நடவடிக்கை அல்லது வாழ்க்கை சான்றிதழ் நடவடிக்கையை நிறைவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசின் சார்பில் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே மாதம்தோறும் இயல்பாக நிகழ்வு ஓய்வு பெறுவதை உறுதி செய்து இந்த அவசியமாக செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், 2022ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி வரை கிடைக்கப் பெற்ற ஓய்வூதியதாரர்களின் 43 ஆயிரத்து 274 பேர் தங்களுடைய சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கையை உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
எனவே விரைவில் அத்தனைபேரும் சான்றிதழ் சரிபார்ப்பு நடவடிக்கை உறுதி செய்து கொள்ளவேண்டும். இவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இவற்றை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னதாக அடையாள சான்றளிப்பு நடவடிக்கையை நிறைவு செய்திருக்க வேண்டியவர்கள். ஆனால், இன்னும் அதைச் செய்யாமல் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைவரும் இதனை விரைவில் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை செய்வதற்கு தனியான அப்ளிகேஷனில் மத்திய அரசு உருவாக்கியுள்ளது அவற்றை டவுன்லோட் செய்து மத்திய அரசின் இந்த சேவைகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜீவன் பிரமான் ஆன்லைன் அல்லது பிரமான் ஃபேஸ் ஆப் மூலமாக முக அடையாளங்களை உறுதி செய்யலாம். இல்லை எனில் ஓய்வூதியதாரர்கள் அருகாமையில் உள்ள சிஎஸ்சி சேவை மையங்களை அணுகி வருடாந்திர சரிபார்ப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்யலாம்.
Input & Image courtesy: News 18