குழந்தைகளின் பாதுகாப்பிற்கு மத்திய அரசின் சேமிப்புத் திட்டம் - கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!

வீடுகளில் குழந்தை இருக்கிறவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சேமிப்புத் திட்டம்.

Update: 2022-06-07 23:50 GMT

இன்றைய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக குறிப்பாக அவர்களுடைய கல்வி கடனுக்காக இன்றிலிருந்து பல்வேறு சட்டங்களை தொடங்குகிறார்கள். அந்த வகையில் இன்றைய கால தலைமுறைப் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சேமிப்பு திட்டங்கள். அவர்களது எதிர்காலத்தை பாதுகாக்க பெற்றோர் எந்ததெந்த வகையான திட்டங்களில் முதலீடு செய்யலாம். முதலாவது அக்கா மத்திய அரசு கொண்டு வந்த, சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் இந்த திட்டம் குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக கொண்டு வரப்பட்பட்டது. 


சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது பெண் குழந்தைகளின் தேவைகளுக்காக பிரத்தியேகமாக நிதியை ஒதுக்கும் முதலீட்டு திட்டமாகும். 21 ஆண்டு கால அளவுகளைக் கொண்டு இந்த திட்டம் செயல்படுகிறது. இதனை 10 வயதுள்ள பெண் குழந்தைகளின் பெயரில் மட்டுமே தொடங்க முடியும். மேலும் 21 கால ஆண்டு நிறைவுக்கு பிறகு திருமண காரணம் அல்லது படிப்பு செலவு போன்ற பிற காரணங்களுக்காக இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். 


மேலும், சிறுமிக்கு 18 வயது நிறைவடையும் போது, ​​சிறுமியின் உயர்கல்விக்காக, முந்தைய ஆண்டு கணக்கு இருப்பில் அதிகபட்சமாக 50 சதவீதத்தை திரும்பப் பெறலாம். பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு என்பது 15 வருட திட்டமாகும். இந்த முதலீட்டு திட்டமானது குறிப்பாக மைனர் குழந்தைகளின் பெயரில் திறக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஒன்றரை லட்சம் வரை தங்களுடைய பணத்தை எதில் முதலீடு செய்ய முடியும். மேலும் இதற்கான வருமான வரி சலுகை களையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News