2024-25 ஆம் ஆண்டில் 3.2 டன் கோதுமை கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு!
2024- 25 ஆம் ஆண்டில் 3.2 டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு மக்களின் நலனுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்காகவும் எண்ணற்ற திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.கடந்த 10 ஆண்டுகால வளர்ச்சியில் மோடி அரசின் கீழ் கணக்கிடப்பட முடியாத சாதனைகள் நிகழ்ந்து மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருப்பது கண்கூடாக காணப்பட்ட உண்மை. மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒவ்வொரு நல திட்டத்திலும் மக்களின் வளர்ச்சியும் நாட்டின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாக இருப்பது இந்திய பொருளாதார நிலை உயர்ந்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
மதிய உணவுத் துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தலைமையில் மாநில உணவுத்துறை செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின் மத்திய உணவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 2024-25 ஆம் ஆண்டு குறுவை சந்தை பருவத்தில் 3 முதல் 3.2 கோடி டன் வரை கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது. 2023 - 24 பயிர் ஆண்டில் 11.4 முதல் 11.5 கோடி டன் கோதுமை உற்பத்தியை விவசாய அமைச்சகம் எதிர்பார்க்கும் போதிலும் குறைந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதே போல நெல் கொள்முதல் பொறுத்தவரை 90 லட்சம் முதல் 1 கோடி டன் வரை குருவை சந்தை பருவத்தில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் உணவுத்துறை அமைச்சகம் கூறி இருக்கிறது.
SOURCE :DAILY THANTHI