மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்த ஹூக்கம் சந்த் ஆலை கடந்த 1992 ஆம் ஆண்டு மூடப்பட்டது. அதன் தொழிலாளர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பாக்கி இருந்தது. அதை பெற தொழிற்சங்கங்கள் சட்ட போராட்டம் நடத்தினர் . மத்திய பிரதேச அரசின் முயற்சியால் தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. தொழிலாளர்களுக்கான 224 கோடி சம்பள பாக்கி அவர்களுக்கு விநியோகிக்க நிகழ்ச்சி நேற்று இந்த ஊரில் நடந்தது. அதற்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக பேசினார். அவர் பேசியதாவது :-
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்சனையை தீர்த்து வைத்த மத்திய பிரதேச அரசுக்கு பாராட்டுக்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். 4800 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதனால் பலன் அடைவார்கள் . தொழிலாளர்களின் பல்லாண்டு கால பொறுமைக்கு பலன் கிடைத்துள்ளது. அவர்களது பொறுமைக்கும் கடின உழைப்புக்கும் தலை வணங்குகிறேன். இந்த நாளில் தொழிலாளர்கள் இடையே பண்டிகை கால உணர்வு நிலவுகிறது. இதே தொழிலாளர்களுக்கு அநீதி கிடைத்த நாளாக அவர்கள் கொண்டாடுவார்கள். அவர்களது குடும்பங்கள் 'இரட்டை எஞ்சின்' அரசை வாழ்த்தும் .
என்னைப் பொறுத்தவரை ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகிய நான்கு பெரிய ஜாதிகள் தான் உள்ளன . ஏழைகளுக்கும் நலிந்த பிரிவினருக்கும் மரியாதை அளிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. சமீபத்திய சட்டசபை தேர்தலில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களை நிறைவேற்ற மாநில அரசு பாடுபட்டு வருகிறது . இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாநில முதல் மந்திரிகள் மோகன் யாதவும் பேசினார்.
SOURCE :DAILY THANTHI