கொரோனா தடுப்பூசி பணியில் சாதனையை நோக்கி இந்தியா !

தமிழ்நாட்டில் மட்டும் 1,14,39,788 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 9,55,984 நபர்கள் இரண்டாம் டோசையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர்.

Update: 2021-08-19 00:37 GMT

நாடு முழுவதும் இதுவரை 56.5 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மத்திய அரசு சார்பாக அனைவருக்கும் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு ஜூன் 21 ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று வரை 56,57,32,128 கொரோனா தடுப்பூசிகளை இதுவரை செலுத்தி உள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 18 முதல் 44 வயது பிரிவில் 25,93,571 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 5,77,183 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் செலுத்தி உள்ளனர். இதேபோல் நாடு முழுவதும் 20,80,43,061 பேர் முதல் டோசையும், 1,72,81,211 நபர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பு ஊசியையும் செலுத்தி கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 11439788 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 955984 நபர்கள் இரண்டாம் டோசையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 298727 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 7717 பேர் இரண்டாம் டோசையும் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Source : PIB 

Tags:    

Similar News