வடகிழக்கு பருவ மழை தீவிரம், வெள்ளத்தில் மூழ்கிய நெல் வயல்கள் - கண்டுகொள்ளுமா அரசு?

வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக இந்த இடத்தில் மூழ்கிய நெல் வயல்கள்.

Update: 2022-11-13 06:10 GMT

வங்கக்கடலில் ஏற்பட்ட ஏற்பட்ட காற்றழுத்து தாழ்வு நிலை காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இதன் காரணமாக திருவள்ளுவர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டிற்குள் முடங்க வேண்டிய ஒரு சூழலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் உத்தரவிட்டு இருக்கிறார். மேலும் பொதுமக்களும் வெளியில் வருவதற்கு தயங்கி வருகிறார்கள்.


கனமழை காரணமாக திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் மிக அதிகமாக கனமழை பெய்து வருகிறது. அங்கு இருக்கும் வெள்ளம் காரணமாக நெல் வயல்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆரணி, கொசஸ்தலை ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மொத்தமாக உள்ள 115 ஏரிகளில் 65க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுவதுமாக நிரம்பி இருக்கிறது.


தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்த காரணத்தின் காரணமாக மக்கள் அங்கிருந்து வெளியேற்றி வரும் முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News