“சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டும்” - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல் !!

“சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டும்” - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல் !!

Update: 2019-07-13 09:40 GMT


சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


விழாவில்  முனைவர் பட்டம் பெற்ற  3 பேருக்கும் ஜனாதிபதி  வாழ்த்து தெரிவித்தார்.


விழாவில்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும் போது கூறியதாவது:-


உயர்நீதிமன்றங்களில் வெளியாகும் தீர்ப்புகளை அந்த அந்த மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால் மக்களுக்கு எளிதில் சென்றடையும்.


கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மலையாளத்திலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய விருப்பம்.


மக்களிடம் சட்டம் குறித்த அறிவை கொண்டு சேர்க்க வேண்டிய தேவை தற்போது இருக்கிறது. வசதி படைத்தவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் ஒரே மாதிரியான நீதியை வழங்கும் பணியை நீதித்துறை செய்ய வேண்டும்.


இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.


Similar News