சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதல் - பின்னணி என்ன?
சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்த மோதலில் ஈடுபட்டுள்ளார்கள்.
சென்னையில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதல். மேலும் கல்லூரியில் வளாகத்திற்குள் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தங்களுக்குள் மோதலில் ஈடுபட்டு கொண்டார்கள். மேலும் மாணவர்கள் தங்கள் தாங்களை கைகளாலும் மற்றம் பிற கூர்மையான பொருட்களை கொண்டு தாக்கி உள்ளார்கள். இதனை அறிந்து போலீசாருக்கு தகவல் கொடுத்து சில மாணவர்கள் உதவியுடன் விரைந்து கல்லூரி வளாகத்திற்குள் போலீசார் வந்தார்கள். இதன் காரணமாக மாணவர்கள் சிதறி ஓடினார்கள்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ள 4 பேரை போலீசார் தற்போது விசாரித்து வருகின்றார். மேலும் அவர்கள் சண்டை போட்ட இடத்தில் அருகில் இருந்த கல்லூரி மதில் சுவரின் மீது பட்டாக் கத்திகள் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை தொடர்ச்சியான வண்ணம் போலீசர் விசாரித்து வருகிறார்கள்.
சுமார் கல்லூரி வளாகத்தில் அமைந்த சாலையில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்டு உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. பூந்தமல்லி மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
Input & Image courtesy:Polimer news