விழாக்கோலம் பூண்ட சென்னை: பிரதமர் வருகையால் நிகழ்ந்த அதிசயம்!

எப்போதும் பரபரப்பாக இயங்கும் சென்னை தற்போது விழா கோலம் பூண்டு காணப்பட்டுள்ளது.;

Update: 2022-05-27 01:04 GMT
விழாக்கோலம் பூண்ட சென்னை: பிரதமர் வருகையால் நிகழ்ந்த அதிசயம்!

பிரதமர் அவர்களை வரவேற்பதற்காக சென்னையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள் பாஜகவினர். குறிப்பாக பிரதமரை வரவேற்பதற்காக ஆளுநர் ரவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடிபழனிசாமி, மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் அவர்கள் நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று மோடியின் மிகவும் அன்புடன் வரவேற்று இருந்தனர். சென்னையில் தற்போது திருவிழா கோலமாக மக்கள் ஆரவாரத்துடன் காணப்படுகிறது. பொங்கல் அன்று ரத்தான நிகழ்ச்சியின் காரணமாக பிரதமர் மோடிக்கு தற்போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.


எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை தற்போது மேலும் சிறப்பு பெற்ற மோடியின் வருகையினால் மக்களின் ஆரவார கடலில் நிறைந்துள்ளது. இன்று பிரதமர் சுமார் ₹ 31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பலத்த பாதுகாப்புக்கு இடையே பா.ஜ.க தொண்டர்கள் தீவிரமாக நிகழ்ச்சியில் ஈடுபட்டு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:News 7

Tags:    

Similar News