பழங்குடியினரை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றும் முயற்சி: பாதிரியார் உட்பட 4 பேர் கைது.!

சட்டீஸ்கரில் இந்து பழங்குடி மக்களை மதமாற்றம் முயற்சிக்காக ஒரு பாதிரியார் உட்பட மூன்று மதபோதகர்கள் கைது.

Update: 2021-12-23 01:15 GMT

சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் மாவட்டத்தில் ஒரு பாதிரியார் மற்றும் மற்றும் அவருடைய மதபோதகர்கள் 3 பெயரை பழங்குடி மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்களை கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த நான்கு பேரை போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 295(A), "ஒருவரை கட்டாயமாக பிற மதத்திற்கு மாற்றும் முயற்சிகள் கூட அவருடைய தனிப்பட்ட நலன்களை பாதிக்கும் வகையில் அமைந்தால் அவர்கள் நிச்சயம் புகார் கொடுக்கலாம்".


இந்திய அரசாங்கம் ஒவ்வொரு தனிநபரும் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப தங்களை பின்பற்றிக் கொள்ளலாம் என்று உரிமை வழங்கியுள்ளது. ஆனால் சில மாதங்களில் உள்ளோர் இத்தகைய செயல்களை தொடர்ந்து நிராகரித்து வருகிறார்கள்.

குறிப்பாக கிறிஸ்தவ மதங்களை நோக்கி மக்களை ஈர்க்கும் முயற்சியில் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது சட்டீஸ்கரில் பழங்குடியின மக்களை மதமாற்றம் செயல்களில் ஈடுபட்ட பாதிரியார் அருண் குஜூர் மற்றும் அவருடைய மதபோதகர்கள் பசந்த் லக்ரா, சால்மன் டிக்கா மற்றும் டினோ குஜூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நான்கு பழங்குடியினரை கிறிஸ்தவர்களாக மாற்ற முயன்றதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. படிக்காத பழங்குடி மக்களை இப்படி மதமாற்றம் செயல்களில் ஈடுபடுவது இவர்களுடைய தொடர்ச்சியான செயலாகவும் இருந்து வருகிறது. இவற்றை தடுப்பதற்காக பழங்குடி மக்கள் குழு போலீசாரிடம் இந்த மனுவைக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: Hindustantimes

Tags:    

Similar News