வ.உ.சி. சிறையில் செக்கிழுத்த சம்பவத்துடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்ட ப.சிதம்பரம் ! சத்திய மூர்த்தி பவனில் நேற்று அரங்கேறிய நகைச்சுவை சம்பவங்கள் !

வ.உ.சி. சிறையில் செக்கிழுத்த சம்பவத்துடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்ட ப.சிதம்பரம் ! சத்திய மூர்த்தி பவனில் நேற்று அரங்கேறிய நகைச்சுவை சம்பவங்கள் !

Update: 2019-12-08 10:47 GMT

கோடானு கோடி ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் திகார் சிறையில் 106 நாட்கள் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் தனது உடல் நிலையைக் காரணமாகக் கூறி ஆரம்பத்தில் இருந்தே வீட்டு உணவு வகைகளுடன், பல்வேறு சிறப்பு வசதிகளையும் சிறையில் பெற்றார். இந்த நிலையில் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வர மூத்த வக்கீல்களை வைத்து போராடி ஜாமீனும் பெற்று 3 நாட்களுக்கு முன்பாக வெளியே வந்தார்.


முதன் முதலாக சிறையில் இருந்து விட்டு வெளியே வந்த அவரை டெல்லியில் யாரும் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. சில ஊடகங்கள் மட்டுமே அவரைக் கண்டு அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் தந்து ஒளி பரப்பின.


இந்த நிலையில் அவர் நேற்று சென்னை வந்தார். அவரை வரவேற்க அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் மிகப்பெரும் செலவில் ஆட்களை திரட்டிக் கொண்டு வந்து காங்கிரசார் சிலருடன் வரவேற்றார். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுயநல ஊடகங்களும் மிகப்பெரிய தியாகிக்கு தரும் முக்கியத்துவத்தை நேற்று தந்தன.


காங்கிரஸ் தலைமை இடமான சத்யமூர்த்தி பவனுக்கு வந்த அவர் தனக்கு அளித்த தடபுடலான வரவேற்பில் மகிழ்ச்சி அடைந்து தமிழ் நாட்டு மக்களைப் போல மற்ற மாநில மக்கள் விழிப்படையவில்லை என்றார். அதாவது இவர் சிறையில் இருந்து வந்ததை மற்ற மாநிலக்காரர்கள் யாரும் கண்டு கொண்டு இவரை வரவேற்கவில்லை என்பதையே இவர் இவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.


அடுத்து பாஜக என்னும் புனித கங்கையில் தாம் ஒரு போதும் குளிக்கப் போவதில்லை என்றார். பாஜக என்கிற கங்கை நதி இவரை தன்னிடம் குளித்து இவரது பாவங்களை போக்கிக் கொண்டு தன்னிடம் இருக்க சொன்ன மாதிரியும் இவர் மறுத்தது போலவும் ஒரு ஜோக் அடித்தார்.


அடுத்து இன்னொரு பெரிய ஜோக் குண்டை தூக்கிப் போட்டார். சிறை தண்டனை பற்றி குறிப்பிடுகையில், வ.உ.சிதம்பரம், பாலகங்காதர திலகர், ஜவகர்லால் நேரு, காமராஜர் போன்றவர்களே சிறையில் இருந்துள்ளனர். காங்கிரஸ்காரனான நான் சிறை தண்டனை அனுபவித்தது புதுமை அல்ல என்ற அவர், வ.உ.சி கை வலிக்க சிறையில் செக்கிழுத்தார், நானோ உடம்பெல்லாம் வலிக்க மெத்தை இல்லாத மரக்கட்டிலில் படுத்து உறங்கியதாகக் கூறினார்.


அது மட்டுமல்லாமல் மெத்தை இல்லாமல் வெறும் கட்டிலில் நீங்களும் படுத்துப் பாருங்கள்..அப்போதுதான் உங்களுக்கும் அந்த கஷ்டம் தெரியும் எனக் கூறியது அங்கிருந்த காங்கிரசார் மனதில் சிரிப்பை உண்டாக்கியதாம்.


இந்த நிலையில், வ.உ.சியும், திலகரும், காமராஜரும் ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்திலா சிறைக்கு சென்றார்கள்? என அப்பாவித் தமிழன் தன் மனதில் தனக்குத் தானே கேட்டுக் கொண்டானாம்.


Similar News