சிதம்பரம் கோவில்: மீடியாக்கள் உருவாக்கும் மாய பிம்பங்கள் என்ன?

சிதம்பரம் கோவில் பற்றி வெளிவராத பல உண்மைகள். மாயை தோற்றத்தை உருவாக்குகிறதா? மீடியாக்கள்.

Update: 2022-03-10 01:06 GMT

இந்து மதம் மற்றும் சைவத்தின் சின்னமான சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் விளங்குகிறது. மேலும் இது பழமையான கோவில்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது, இவற்றை பாதுகாக்கும் பொறுப்பும் தமிழ் சமூகத்தையும் சேர்ந்தது. கடந்த ஆண்டுகளாகவே பெரும் பிரச்சினைகளில் இருந்து வரும் இந்த கோவிலில் இதுவரை அறியப்படாத உண்மைகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை( HR&CE) சட்டங்கள் குறித்தும் மக்களுக்கு இல்லாத விழிப்புணர்வு பற்றிய புரிதல்களும் இதற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. மேலும் கோவில்களில் முழுப்பொறுப்பையும் கவனித்து வரும் தீட்சிதர்கள் எப்படி? இந்துமத எதிர்ப்பு மற்றும் தர்மத்திற்கு எதிரான தவறான வழிகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. மேலும் இத்தகைய பிரச்சினைகளுக்குப் பின்னால் பல்வேறு நக்சலைட்டுகள், கமிட்டிகள் மற்றும் மிஷனரிகள் இதை ஒரு இதே மற்றொரு கோணத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.


சிதம்பரம் நடராஜர் கோவில் முழுக்க முழுக்க சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தீட்சிதர்களால் நிர்வாக பட்டு வருகிறது. தீட்சிதர்கள் கோவில்களுக்கு சேவைகளை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் கோவில் சொத்துக்களை நிர்வகிப்பதில் கிடையாது. யார் கோவில்களுக்கு சொத்துக்களை தானமாக கொடுக்கிறார்களோ? அவர்கள் சொத்துக்களை நிர்வகித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மட்டும் தீட்சிதர்களுக்கு கொடுத்து, கோவிலுக்கு தேவையான அன்னதானம் போன்ற பல்வேறு செயல்களை செய்ய சொல்கிறார்கள். ஆனால் இதை வெளியில் மாய பிம்பமாக உருவாக்கி, தீட்சிதர்கள் தான் கோவிலின் முழு சொத்தையும் அபகரித்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இந்த கோவில் வர வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 


2014 ஆம் ஆண்டு வெளிவந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கோயில் நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே பல நூற்றாண்டு காலமாக நிலவி வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.கோவில் நிர்வாகத்தின் கூட்டுக் கட்டுப்பாட்டில் தீட்சிதர்கள் உள்ளனர். சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் என்று அழைக்கப்படும் பழமை வாய்ந்த ஸ்ரீ சபாநாயகர் கோயிலின் ஆஸ்தி மற்றும் அசையா சொத்துக்களை நிர்வகிப்பதற்கு செயல் அலுவலரை (EO) நியமித்து தமிழக அரசு அன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பளித்தது. தீட்சிதர்கள் அரசியலமைப்பின் 26 வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட ஒரு மதப் பிரிவினர் மற்றும் அவர்கள் பல நூற்றாண்டுகளாக கோயில் நிர்வாகத்தில் பங்கு பெற்றனர். அதேசமயம், "அரசாங்கம் எப்படி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அவர்களை விலக்க முடியும்?" என்று நீதிபதி சார்பாக கேள்விகள் எழுப்பப் பட்டது. 

பொது தீட்சிதர்கள் ஒரு தனித்துவமான வாழ்க்கை முறை மற்றும் சடங்குகளைக் கொண்ட ஒரு தனித்துவமான இந்துக் குழு. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவில்களில் பாரம்பரியமாக நிர்வகித்தல் அவர்கள் கட்டுப்பாட்டில் தான் அந்த கோவில் வந்து சேரும். மேலும் அதற்கு மாநில அரசு உறுதுணையாக இருந்து பல்வேறு உதவிகளையும் புரிய வேண்டும். இன்னும் சிதம்பரம் கோயிலுக்கு சொந்தமான 3500 ஏக்கர் நிலங்கள் மீட்கபடாமல் இருப்பதாகவும் T.R. ரமேஷ் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் இது பற்றி கூறியுள்ளார். ஆனால் அவற்றை பராமரிப்பு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை, கோவில் சபா நாயகர் குழுவிற்கு கொடுக்க வேண்டிய பொறுப்பும் இந்து சமய அறநிலையத் துறையை சார்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Input & Image courtesy:Twitter Post

Tags:    

Similar News