சீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை - பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
சீனாவில் தற்போது பணவீக்கம் அழுத்தத்தின் காரணமாக பொருளாதார அடிப்படைகள் தாழ்ந்து கொண்டு வருகின்றது.
உலகத்தில் உள்ள அனைத்து பொருளாதார நாடுகளில் கண்களும் தற்போது சீனப் பொருளாதாரத்தின் மீதே உள்ளன. ஜூன் 2022 இல் மீண்டு வருவதற்கான அறிகுறிகளைக் காட்டிய பிறகு, ஜூலை மாதத்தில் சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி மீண்டும் சுருங்கியது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை காரணமாக தொழிற்சாலைகள் அனைத்தும் தொழில்நுட்ப கிடைக்கின்றன மேலும் நோய்த்தொற்றின் அழுத்தத்தின் காரணமாக பல்வேறு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஆண்டு வளர்ச்சி இலக்கு 5.5 சதவீதம் என்பது அனைத்து கொள்கை வகுப்பாளர்களுக்கும் தொலைதூரக் கனவாகத் தோன்றுகிறது.
நோய்த்தொற்றின் காரணமாக சீனாவில் 40 சதவீதத்திற்கு அதிகமான நிறுவனங்கள் தற்போது மூடு நிலைமயை எட்டியுள்ளது. இந்த நிறுவனங்கள் மூடுதல் காரணமாக பல்வேறு தொழிலாளர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பினை இலக்கும் ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வகையான தொழில்களும் தற்போது மீண்டு வருவது என்பது சாத்தியகூறுகள் கம்மியாக தான் இருக்கின்றன.
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மக்கள் அன்றாட செயல்களுக்குக் கூட பணம் ஈட்ட முடியாத ஒரு சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளதாம். பல்வேறு மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் சென்றுள்ளதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனங்கள் சார்பில் தொடர்பான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்களை எப்படி வழி நடத்துவதற்கு அரசு பல்வேறு தவறான முடிவுகளை எடுத்தது காரணம் என்று பல அரசியல் கட்சித் தலைவர்களும் சார்பில் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy: Swarajya News