சீனாவில் ஆப் ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இஸ்லாமிய நூலான 'குர்ஆன்' - தடை என அறிவிப்பு !
ஆப்பிள் தயாரிப்புகள் சீனாவில் உள்ள தனது ஆப் ஸ்டோரிலிருந்து இஸ்லாமிய நூலான குர்ஆன் செயலியை நீக்கியது பரபரப்பாக பேசப்படுகிறது.
சீனாவில் அரசாங்க அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று பிரபல அலைபேசி தயாரிப்பாளர்களான ஆப்பிள் நிறுவனம் தங்களின் அதிகாரப்பூர்வ இணைய செயலிகள் பதிவிறக்கும் தளத்தில் இருந்து 'குர்ஆன்' செயலியை தடை செய்துள்ளது.
இதனையடுத்து சீனாவில் இஸ்லாமியர்களின் 'குர்ஆன்' நூலை ஆப்பிள் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்ய இயலாது. இதற்கு காரணமாக சீனாவின் அதிகாரிகள் கூறியதாவது, "குர்ஆன் மஜீத்' பாகிஸ்தான் தரவு மேலாண்மை சேவைகளால் உருவாக்கப்பட்டது" எனவும், 'குர்ஆன் மஜீத்' சட்டவிரோதமான உள்ளடக்கத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்கள் துல்லியமாக என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை" எனவும் சீன அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.