சீனா, ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராமல் பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.44 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை 49 லட்சம் பேர் வரைக்கும் உயிரிழந்துள்ளனர். தற்போது சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை கட்டுப்படுத்த தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை செலுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், டெல்டா வகை தொற்று பவரல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தலும் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் முககவசங்கள் அணியவும், சானிடைசர் வைத்து கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
Source, Image Courtesy: News 18 Tamilnadu