முஸ்லீம் சிறுபான்மையினரை குறிவைத்து சீனா மேற்கொண்ட மனித உரிமை மீறல் - 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

முஸ்லீம் சிறுபான்மையினரை குறிவைத்து சீனா மேற்கொண்ட மனித உரிமை மீறல் - 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

Update: 2020-07-22 02:33 GMT

சீனாவில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் முஸ்லீம் சிறுபான்மையினரை குறிவைத்து, சீனா மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருந்த 11நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், சீன அரசாங்கத்தால் சின்ஜியாங்கில் மேற்கொள்ளப்பட்ட கட்டாய தடுப்புக்காவல் பிரச்சாரத்தை ஆவணப்படுத்தியுள்ளனர்.

இதில் முஸ்லீம் மற்றும் பிற சிறுபான்மையின மக்கள் ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசத்தை அதிகரிக்கும் நோக்கில் பெரிய தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளில் சிலர் முகாம்களில் அல்லது அதற்கு அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது, அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசு செய்து வந்தது.

உய்குர் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை கண்டித்துள்ள, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அவர்களை சீனா நடத்தும்விதம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை என விமர்சித்துள்ளார். இந்நிலையில், 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

Similar News