அமெரிக்கா மீது சீனா போர்த்தொடுக்கும்: முன்னாள் அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு!
சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் பல ஆண்டுகளாக பனிப்போர் நடைபெற்று வருவது உலக நாடுகள் அறிந்தது. இதில் உலக வர்த்தக சந்தையில் இரண்டு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் பல ஆண்டுகளாக பனிப்போர் நடைபெற்று வருவது உலக நாடுகள் அறிந்தது. இதில் உலக வர்த்தக சந்தையில் இரண்டு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு பற்றி முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து கூறியிருப்பதாவது: அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றதால் தற்போது அமெரிக்கா பலவீனமாக மற்றும் ஊழல் நிறைந்த தலைமையை கொண்டுள்ளது.
அதற்கு எடுத்து காட்டாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதுதான். தாலிபான்களிடம் அமெரிக்கா சரணடைந்துவிட்டது. இதன் காரணமாக பலவீனமான அமெரிக்காவை சீனா மதிப்பதில்லை. இதனால் அமெரிக்காவுடன் சீனா நிச்சயம் போர் புரியும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar