கிறிஸ்துவராக மதம் மாறிய பின் போலி சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியா ?
தமிழகத்தில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிருஸ்துவராக மதம் மாறிய ஒருவர் பொய்யான சாதி சான்றிதழ் கொடுத்து மனுதாக்கல் செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணிபேட்டை மாவட்டம், புலிவலம் கிராம் பஞ்சாயத்து ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 9 தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்.
இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் புலிவலம் கிராமத்தை சேர்ந்த பாதிரியார் சத்தியசீலன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.
அதில். சென்னை சோழிங்கநல்லூரில் வசித்து வரும் பிரேம்நாத் என்பவர் கிருஸ்துவராக மதம் மாறிய அவர் ஆதிதிராவிடர் இந்து என சான்றிதழ் பயன்படுத்தி வேட்புமனு தாக்கல் செய்ததாகவும் இது ஆதிதிராவிட சட்டத்திற்கு புறம்பானது என்றும் மேலும், அவருக்கு சம்பந்தமே இல்லாத தன்னுடைய (சத்தியசீலன்) இல்ல முகவரியை பயன்படுத்தி மனுதாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிடுள்ளார்.
இதனால், அவருடைய வேட்பு மனுவை நிராகரிக்க கோரியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் வருகின்ற 9 தேதி தேர்தல் நடைபெறவுள்ளது ஆதலால் அதில் தலையிட முடியாது எனவும், தேர்தல் முடிந்த பின்னர் உரிய அலுவலர்களிடம் மனுதாரர் புகார் அளிக்கலாம் எனவும் கூறி இந்தமனுவை முடித்து வைத்தனர். கிருஸ்துவராக திருச்சபையில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் ஆதிதிராவிடர் இந்து என சான்றிதழ் அளித்திருப்பது சர்சையை கிளப்பியுள்ளது.