கொரோனா தடுப்பூசிலாம் சும்மா என பரப்புரை செய்த கிறிஸ்தவ போதகர் கொரோனாவுக்கு பலி!

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே போன்று அமெரிக்காவிலும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் கிறிஸ்தவ மத போதகர் மார்கஸ் லாம்ப் என்பவர் தடுப்பூசிக்கு எதிராக தனது பிரச்சாரத்தை முன்வைத்தார்.

Update: 2021-12-02 11:38 GMT

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டது. அப்போது கிறிஸ்தவ  மத போதகர் ஒருவர் தடுப்பூசிக்கு எதிராக பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இதனிடையே கொரோனா தொற்றால் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே போன்று அமெரிக்காவிலும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அந்த சமயத்தில் கிறிஸ்தவ மத போதகர் மார்கஸ் லாம்ப் என்பவர் தடுப்பூசிக்கு எதிராக தனது பிரச்சாரத்தை முன்வைத்தார்.

இவர் மதத்தை பரப்புவதற்காகவே தனியாக தொலைக்காட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தடுப்பூசி எதிராக பொய்யான தகவல்களை பரப்பி வந்தார். தடுப்பூசி என்பது பொய். அதனை போட்டுக்கொள்ளாதீர்கள் அதனால் பக்க விளைவுகள் வரும் என்பன பல பொய்யான தகவல்களை பரப்பி வந்தார். அவரது தகவல்களை அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மறுத்தது. தடுப்பூசி போடுவதால் கொரோனா தொற்று தாக்காது, உயிரிழப்புகள் மற்றும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது என்று விளக்கம் அளித்து வந்தது.

இந்நிலையில், மதபோதகர் மார்கஸ் லாம்ப் திடீரென்று உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலை அவரதுமனைவி ஜோனி லாம்ப் அறிவித்துள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News