ஊழியம் செய்கிறேன் என்கிற பெயரில் பொதுமக்களிடம் ரூ. 4.51 லட்சம் மோசடி - மத போதகரை தேடும் பணியில் போலீசார்!
பொதுமக்களிடம் சுமார் ரூபாய் 4.51 லட்சம் ரூபாய் மோசடி செய்த மத போதகர் இருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி பெரிய வீரம் பட்டினத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவருக்கு புதுச்சேரி விக்டோரியா நகர் ரூபன் என்பவர் மூலம் சென்னை பனையூரைச் சேர்ந்த மத போதகர் ஸ்டீபன் என்பவரால் அறிமுகமானார். அவர் தன்னுடைய அறக்கட்டளையில் 500 ரூபாய் செலுத்தினால், மூன்று மாதத்திற்கு பின் மாதத்திற்கு 7000 ரூபாய் கிடைக்கும் என்று ஸ்டீபன் என்றும் மதபோதகர் அவரிடம் கூறியிருக்கிறார்.
அவர் கூறும் வார்த்தைகளை உண்மை என்று நம்பிய குப்புசாமி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் 2018 ஆம் ஆண்டு நாலு புள்ளி ஐந்து லட்ச ரூபாய் ஸ்டீபன் என்பவரிடம் கொடுத்து இருக்கிறார்கள். 7000 ரூபாய் மாதத்திற்கு கிடைக்கும் என்பதை நம்பி பல மக்கள் இதில் முதலீடு செய்து இருக்கிறார்கள். நான்கு ஆண்டுகள் ஆகியும் அவர் கூறியபடி மாதம் தோறும் பணம் கிடைக்கவில்லை. இதைப்பற்றி கேட்ட குப்புசாமி உள்ளிட்டவரை ஸ்டீபன் மிரட்டி இருக்கிறார்.
குப்புசாமி அவர்கள் அளித்த புகாரியின் பெயரில் ரெட்டியார் பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுதுதான் அவர் அனைவரையும் ஏமாற்றிய விஷயம் தெரிய வந்து இருக்கிறது. ஆனால் தற்போது மத போதகர் மற்றும் அவருடைய உடன் இருந்த நபர் ஒருவரையும் காணவில்லை. அவர் இருவர்களை இருவரையும் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: Dinamalar News