திருக்கேதீஸ்வரர் கோவில் நுழைவு வாயிலில் கிறிஸ்தவ சொரூபம்: சைவ மகா சபை கடும் கண்டனம்!

Update: 2022-02-14 10:43 GMT

சைவத்தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலத்தில் திருக்கேதீஸ்வர நுழைவு வாயிலில் கிறிஸ்தவ மதத்தின் சொரூபம் அமைத்துள்ளனர். இந்த செயலுக்கு இலங்கை சைவ மகா சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி உடனடியாக சொரூபத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது; வரலாற்றுமிக்க திருக்கேதீஸ்வரத்தின் தனித்துவத்தை சிதைக்கின்ற வகையில் சைவர்களின் மனதை மிகப்பெரிய அளவில் புண்படுத்தும் நோக்கத்தில் திருக்கேதீஸ்வரர் வளைவு உடைக்கப்பட்ட வீதியின் முகப்பின் வாயிலில் கிறிஸ்தவ அடையாளமாக சொரூபம் அமைக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. அண்மை காலமாக உயர்மத வழிபாட்டு தலங்கள் முன்பாக கிறிஸ்தவ மதம் ஈடுபட்டு வருகிறது. இது பற்றி மன்னார் உயர் அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் சொரூபம் அமைத்துள்ளது மிகப்பெரிய அவமானத்துக்குரிய விஷயமாகும். மேலும், இது குறித்து திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம் காவல்துறையில் முறையிட்டுள்ளது. வரலாற்று கால தமிழ்ச் சைவர்களின் மரபுரிமையான திருக்கேதீஸ்வர திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கண்டனத்தை தெரிவிக்கிறோம். இந்த கிறிஸ்தவ சொரூபத்தை உடனடியாக அகற்ற மன்னார் ஆயர் இல்லம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Source, Image Courtesy: IBC

Tags:    

Similar News