திடீரென காணாமல் போன தென் கொரிய மேயர் பிணமாக மீட்பு - அவருக்கு என்ன நேர்ந்தது?

திடீரென காணாமல் போன தென் கொரிய மேயர் பிணமாக மீட்பு - அவருக்கு என்ன நேர்ந்தது?

Update: 2020-07-10 06:54 GMT

தென் கொரியா நாட்டின் தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் திடீரென காணாமல் போன நிலையில் ஏழு மணி நேர தேடுதல் பணிக்கு பிறகு பிணமாக மீட்டெடுத்துள்ளனர்.

மேயர் பார்க் ஒன் சூன்னின் உடலை சங்பக் என்கிற மலைப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. மேயருக்கு 64 வயது ஆகிறது. தென் கொரியாவின் இரண்டாவது மிக பெரிய தலைவர் ஆவார். கடந்த 2011 -ஆம் ஆண்டு மேயராக தேர்வான பிறகு அவர் 2018-ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து மேயர் ஆனார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மேயர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் அவர் மீது 'மி டூ' மூலம் பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது மேயர் திடீரென காணாமல் போன தகவலை அவருடைய மகள் காவல் துறைக்கு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து விசாரணை துவங்கிய காவல்துறை அவருடைய செல்போனை ட்ரஸ் செய்தனர். அவருடைய செல்போன் கடைசியாக சங்பக் என்கிற மலைப்பகுதியில் உபயோகத்தில் இருந்துள்ளது. அதன் பிறகு செல்போன் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 600 பேர் அப்பகுதியில் தேடுதல் பணியை தீவிரமாக மேற்கொண்டார். சுமார் ஏழு மணி தேடுதல் பணிக்கு பிறகு மேயர் பார்க் ஒன் சூன்னை பிணமாக கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News